பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள 89-வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லப்பட்டது. இந்த தேர்தலில் 428-தேர்தல் அலுவலர்களும், பாதுகாப்புப் பணிக்கு 250-போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.
கோவை: பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள 89-வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லப்பட்டது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36-வார்டுகளில் மொத்தம் 151-பேர் போட்டியிடுகின்றனர்.
36-வார்டுகளில் மொத்தம் 89-வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள 89-வாக்குச்சாவடிகளுக்கு 89-மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், மற்றும் அவசரத் தேவைக்குக் கூடுதலாக 18-எந்திரங்கள் என மொத்தம் 107-வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி இன்று பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் மண்டல அலுவலர் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் டெம்போ வேனில் ஏற்றப்பட்டுப் பாதுகாப்பாக அந்தந்த வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 89-வார்டுகளில் 49-வார்டுகள் பதட்டமான வாக்குச்சாவடி என அறிவிக்கப்பட்டு அந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த தேர்தலில் 428-தேர்தல் அலுவலர்களும், பாதுகாப்புப் பணிக்கு 250-போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.