கோவையின் ஐந்து மண்டலங்களிலும் இலவச IAS, IPS பயிற்சி மையம் அமைத்து தரப்படும் - 44வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர்..!

மேலும், குடிநீர் விநியோகம் சீராக மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் ஏற்படுத்தித் தரப்படும் என்று கோரி வாக்கு சேகரித்தார்.



கோவை: கோவையின் ஐந்து மண்டலங்களிலும் இலவச IAS, IPS பயிற்சி மையம் அமைத்து தரப்படும் என 44வது வார்டில் போட்டியிட உள்ள காயத்ரி ஆர் ராஜமுரளி கூறியுள்ளார்.

வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்லை தொடர்ந்து தேர்தல் பிரச்சார களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.



இந்நிலையில், கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தில் சாய்பாபா காலனி பகுதியில் 44வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள காயத்ரி ஆர். ராஜமுரளி கூறியதாவது:-



கடந்த ஆறரை வருடமாக மாமன்ற உறுப்பினரும், மேயரும் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அடிப்படை வசதியின்றி தவிக்கின்றனர். பொது மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் வந்தவுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்தவுள்ளார்.

சாக்கடை சரிவர பாரமரிக்கததால் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ரோடுகள் பழுதடைந்துள்ளது. நாங்கள் வீடு வீடாகச் சென்று நடத்தும் பிரசாரத்தில் மக்கள் ரோடு வசதிகள் செய்து தர வேண்டும் என்பதே பெரிதும் மக்கள் முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது.



அடுத்ததாக, கொசுக்களின் தொந்தரவுக்கு சாக்கடைகளை சீரமைத்து உடனடியாக இந்த பிரச்சினை தீர்க்கப்படும். தெரு நாய்கள் பிரச்சனை சரி செய்யப்படும். குடிநீர் விநியோகம் சீராக மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் ஏற்படுத்தி தரப்படும் எனக்கோரி வாக்கு சேகரித்தார். மேலும், இலவச IAS, IPS பயிற்சி மையம் இளைஞர்களுக்காக கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...