கோவை மாநகராட்சி 52வது வார்டில் திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தீவிர வாக்கு சேகரிப்பு..!

அவரது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.



கோவை: கோவை மாநகராட்சி 52 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.



திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், கோவை மாநகராட்சி வார்டு 52 மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும், திமுக வெற்றி வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் இன்று தனலட்சுமி நகர், ராம் லட்சுமணன் நகர், ஸ்ரீ தனலட்சுமி நகர், தனலட்சுமி நகர் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.



அப்பொழுது அவர் கூறியதாவது:-

எனக்கு இந்த வார்டில் போட்டியிட வாய்ப்பளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது முறையாக நான் இந்த வார்டில் போட்டியிடுகிறேன். நான் வெற்றி பெற்றதும் இந்த பகுதியில் உள்ள மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றித் தருவேன். செம்மொழி மாநாடு நடந்தபோது முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் கோவை மாநகரில் 1000 செம்மொழி பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பூங்காக்கள் தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இந்த பகுதியில் உள்ள செம்மொழி பூங்காவை புதுப்பித்து தர நடவடிக்கை எடுப்பேன். மேலும், இந்த பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதாக மக்கள் தெரிவித்தனர். நான் வெற்றி பெற்றதும் இரண்டு நாளைக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.



மேலும், மழை நீர் வடிகால் பாதாள சாக்கடை இணைப்பு ஆகிய பணிகளை உடனடியாக செய்து தருவேன். எனவே வாக்காளர்கள் ஆகிய நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறினார்.

மேலும், அவருடன் பகுதி பொறுப்பாளர் வே. பாலசுப்பிரமணியம், மா. ரவி சிங்கை பிரபாகரன் ex.mc.சி.எஸ்.முருகேஷ், சின்னமணி, ஆர். செல்வராஜ், கே. செல்வராஜ், அரசு கோவிந்தராஜ் பழனிசாமி, சுந்தர்ராஜ், பொன்னுசாமி மனோகரன், குணசீலன், அர்ஜுனன், ஆறுமுகம், பத்மநாபன் செல்வராஜ், ராஜேஷ், மகளிரணி பரிமளம், மைதிலி சிபிஎம் கட்சியின் ஜெயபால், கோவர்த்தனன், பாலாஜி, மற்றும் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.



Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...