கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட கமல்ஹாசன் இரு நாட்கள் பிரச்சாரம்..!

கடந்த சட்டசபை தேர்தலில், கமல் ஒரு மாதம் தங்கியிருந்து, நகரின் முக்கிய பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் இரண்டு நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

கடந்த சட்டசபை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஒரு மாதம் தங்கியிருந்து, நகரின் முக்கிய பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்தார்.

இது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும், 1,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் கமல் தோல்வி அடைந்தார்.

இதனையடுத்து, வார்டு வாரியாக, ஒவ்வொரு பூத் வாரியாக பதிவான ஓட்டுக்களை மக்கள் நீதி மய்யத்தினர் ஆய்வு செய்தனர். சில பூத்களில் மட்டுமே பின்தங்கியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து களமிறங்கியுள்ளது. கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள, 100 வார்டுகளில், 77க்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்ய மாநில துணைத் தலைவர் தங்கவேலு கூறுகையில்:-

சட்டசபை தேர்தலில் கூட்டணி பலத்தோடு மோதியும், சொற்ப ஓட்டு வித்தியாசத்திலேயே பா.ஜ.க, வெற்றி பெற்றது. இப்போது தனித்து நிற்கின்றனர். அவர்களின் பலம் தெரியும்.

கோவை தெற்கு தொகுதிக்குள், 12 வார்டுகள் இருக்கின்றன. 10 வார்டுகளில் ம.நீ.ம., வேட்பாளருக்கு வெற்றி பிரகாசமாக இருக்கிறது. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட, கட்சித் தலைவர் கமல் இரு நாட்கள் பிரசாரம் செய்கிறார், என்றார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...