திருப்பூர் 58 வது வார்டு கவுன்சிலர் வேட்பாளரை உடனடியாக அறிவிக்க கோரி, 300க்கும் மேற்பட்டோர், கட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர்.
திருப்பூர்: நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில், திமுக, தன் கூட்டணி கட்சிகளுக்கு 28 வார்டுகள் ஒதுக்கீடு செய்துள்ளது, மீதமுள்ள 32 வார்டுகளில் மட்டுமே திமுக போட்டியிட உள்ளது.
எனவே, 32 வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட, அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே, 58 வது வார்டு கவுன்சிலர் வேட்பாளரை உடனடியாக அறிவிக்க கோரி திமுக கட்சியை சேர்ந்த 58-வது வார்டு கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள பலவஞ்சிபாளையத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர்.
கோவையிலும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சுண்டக்காமுத்தூர் வா காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க கூடாது என்று திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை 4 ஆம் தேதி, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது நிலையில், திமுகவினர் இன்னும் முழு வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் உள்ளது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.