கோவை கிணத்துக்கடவு அருகே மாயமான கோவில் பூசாரி வாய்க்காலில் சடலமாக மீட்பு..!

பூசாரி செந்தில்குமார் மரணம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே மாயமான கோவில் பூசாரி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் வடக்கு வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(47). இவருக்கு கணேஷ்(26), மணிகண்டன்(24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

செந்தில்குமார் அரசம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக உள்ளார். இவரது மனைவி புஷ்பலதா 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்த நிலையில், செந்தில்குமார் கடந்த 31ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் செந்தில் குமாரை தேடி வந்தனர்.

இதனிடையே, கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் வழியாகச் செல்லும் போத்தனூர் - பொள்ளாச்சி அகல ரயில் பாதை தண்டவாளத்தின் ஓரத்தில் வாய்க்காலில் செந்தில்குமார் சடலமாக கிடப்பதாக நேற்று தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போத்தனூர் ரயில்வே போலீசார் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், செந்தில்குமார் மரணம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...