தெலுங்கு பாளையம் அருகே உள்ள ஸ்வீட் கடையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்கப்பட்டனர்.
கோவை: கோவையில் குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
கோவையில் பெரிய வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி பணிக்கு அமர்த்தினால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், கோவை தெலுங்கு பாளையம் ராஜேஸ்வரி நகரில் உள்ள ஸ்வீட் கடையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதாக தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரி அலெக்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையை சோதனை செய்தனர்.
அப்போது, 9 மற்றும் 11 வயதுடைய சிறுவர்கள் 2 பேரை ஸ்வீட் கடையில் பணிக்கு அமர்த்தி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில், சிறுவர்களை பணிக்கு அமர்த்திய ஸ்வீட் கடை உரிமையாளர்கள் செல்வபுரம் தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்த தவசி அப்பன் அடைக்கலம் (31) செல்வபுரம் சொக்கம்புதூர் சேர்ந்த கண்ணன் (42), ஆகிய 2 பேர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர், குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்கப்பட்டனர்.