கோவையில் கிறிஸ்தவ தேவாலய சிலை உடைப்பு பள்ளி மாணவன் உள்பட 2 பேர் கைது

கோவையில் கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் இருந்த சிலையை உடைத்த வழக்கில் பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் இருந்த சிலையை உடைத்த வழக்கில் பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவையில் கடந்த 23-ஆம் தேதி ராமநாதபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வாசலில் அமைந்துள்ள செபஸ்தியர் சிலையை மர்ம நபர்கள் உடைத்துச் சேதப்படுத்திச் சென்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் லாரி ஓட்டுநரையும் பத்தாம் வகுப்பு மாணவனையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையில் கிறிஸ்தவ தேவாலய சிலை உடைப்பு தொடர்பாக, இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, ராமநாதபுரத்தில் ஹோலி டிரினிட்டி சர்ச் உள்ளது. இங்கு கடந்த 23ம் தேதி இரவு, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத சிலர், தேவாலயம் முன்பகுதியில் இருந்த செபஸ்தியர் சிலை இருந்த கண்ணாடி பெட்டகத்தை உடைத்து, சிலையைச் சேதப்படுத்தினர்.

இதையடுத்து, கிறிஸ்தவ தேவாலய பாதிரியார் அளித்த புகாரின் அடிப்படையில், ராமநாதபுரம் போலீசார் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். நேற்று வெள்ளலுார் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மதன்குமார், 23 மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...