கோவை கிணத்துக்கடவு அருகே ஐ.டி அதிகாரி போல் நடித்து பணம் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்..!

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மகேஸ்வரன், பைசல் ஆகியோரை கிணத்துக்கடவு போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே காந்திநகரில் ஐ.டி அதிகாரி போல் நடித்து பணம் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி மேத்யூ நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காந்திநகரை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் பஞ்சலிங்கம். இவருடைய வீட்டிற்கு கடந்த 15ம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் என்றுகூறி வீட்டில் இருந்து ரூ.15 லட்சம், உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர்.

இது தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்குபதிவு செய்து இதற்கு முக்கிய காரணமாக இருந்த சதீஷ் (36), ஆனந்த் ,(47), ராமசாமி(47), தியாகராஜன் (42), பிரவீன்குமார் ( 36) மோகன்குமார் (30), மணிகண்டன் (37) ஆகிய 7 பேரை கிணத்துக்கடவு போலீசார் முதல்கட்டமாக கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இதில் பஞ்சலிங்கம் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி வேடம்போட்டு சென்ற முக்கிய குற்றவாளியான கோவையை சேர்ந்த மேத்யூ, காரணம்பேட்டை மகேஸ்வரன், கவுண்டம்பாளையம் பைசல் ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர்.

இவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கோவை ரத்தினபுரி மேத்யூ வயது (60) நேற்று பொள்ளாச்சி ஜெ.எம்.2 நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.



நீதிமன்றத்தில் சரணடைந்த மேத்யூவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முக்கிய குற்றவாளியான மேத்யூ நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளதால் கிணத்துக்கடவு போலீசார் மேத்யூவை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மகேஸ்வரன், பைசல் ஆகியோரை கிணத்துக்கடவு போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...