குடோனில் பதுங்கிய சிறுத்தை ஆரோக்கியமாக இருப்பதாக வனத்துறை தகவல்

குடோனில் பதுங்கிய சிறுத்தை 3 முறை கூண்டின் அருகே வந்து சென்றதாகவும், ஆரோக்கியமாக உள்ளதாகவும், அதிகாலை நேரத்தில் மட்டுமே சிறுத்தை உலா வருவதாகவும் பகலில் ஓய்வெடுப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: குடோனில் பதுங்கிய சிறுத்தை 3 முறை கூண்டின் அருகே வந்து சென்றதாகவும், ஆரோக்கியமாக உள்ளதாகவும், அதிகாலை நேரத்தில் மட்டுமே சிறுத்தை உலா வருவதாகவும் பகலில் ஓய்வெடுப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள குடோனில் மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை கடந்த 17-ந் தேதி பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த குடோன் இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்து 6 கேமராக்கள் மூலமாகக் கண்காணித்து சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தொடர்ந்து 5-வது நாளாகக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் இன்று அதிகாலையில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி வெளியிட்டனர்.

மூன்று முறை சிறுத்தை கூண்டில் மிக அருகில் வந்து சென்றுள்ளது. ஆனால் கூண்டுக்குள் செல்லவில்லை. அதிகாலை நேரத்தில் மட்டுமே சிறுத்தை உலா வருவதாகவும் பகலில் ஓய்வெடுப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுத்தைப்புலி மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...