வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் கோவை வனச்சரக பகுதிகளில் மரணமடைந்த உயிரினங்களின் 600-க்கும் மேற்பட்ட எலும்புகள், நகங்கள், பற்கள் என அனைத்தும் இன்று தீயிட்டு எரிக்கப்பட்டது.
கோவை: வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் கோவை வனச்சரக பகுதிகளில் மரணமடைந்த உயிரினங்களின் எலும்புகள், நகங்கள், பற்கள் என அனைத்தும் இன்று தீயிட்டு எரிக்கப்பட்டது.
கோவை வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் கோவை வனச்சரக பகுதிகளில் மரணமடைந்த உயிரினங்களின் எலும்புகள், நகங்கள், பற்கள் என அனைத்தும் இன்று தீயிட்டு எரிக்கப்பட்டது.
வன உயிரின சட்டத்தின் கீழ் இறந்த வன உயிரினங்களின், பற்கள், தந்தங்கள் எலும்புகள், நகங்கள் என வன உயிரினங்களின் உடற்பாகங்களை, மனிதர்கள் சேமித்து வைப்பது குற்றம்.
எனவே, இது போன்று சேமிக்கப்படும் பொருட்களை ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் எடுத்து செல்வதும், அவ்வாறு செல்லும் பொழுது பிடிக்கப்பட்டாலோ அது வன உயிரின சட்ட பிரிவில் குற்றம் என்பதால் இது போன்ற குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் வனச்சரக பகுதிகளில் மீட்கப்படும் வன உயிரின பாகங்களை வன அலுவலர்கள் வன ஆர்வலர்கள் முன்னிலையில் அதனை அப்புறப்படுத்துவது வனம் சார்ந்த செயலாக உள்ளது.

இதனடிப்படையில், சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவின்படி, கோவை உட்பட 7 வனச்சரக பகுதிகளான பெரிய நாயக்கன் பாளையம், காரமடை மேட்டுப்பாளையம், சிறுமுகை, மதுக்கரை, போலுவம்பட்டி மற்றும் போன்ற வனப்பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து வருடங்களாகப் பிடிக்கப்பட்ட மற்றும் கைப்பற்றப்பட்ட பல்வேறு யானைத்தந்தங்கள், புலிநகங்கள், மான்கொம்புகள், மான் தோல், சிறுத்தை பற்கள் என பல்வேறு பொருட்கள் அனைத்தும் கோவை வனச்சரக வன பாதுகாவலர் ராமசுப்ரமணியம் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் வனவிரிவாக்க அலுவலர் தினேஷ் குமார் முன்னிலையில், அவ்வாறு பிடிக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட எலும்புகள், நகங்கள் பற்கள், மான்கொம்புகளை இன்று தீயிட்டு எரிக்கும் பணி நடைபெற்றது.

இதில் ஓசை அமைப்பின் தலைவர் செந்தில் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஜலாலுதின் மற்றும் வன பாதுகாவலர்கள் வன அலுவலர்கள் என பலர் முன்னிலையில் எரிக்கப்பட்டது.