திருப்பூரில் குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளைக் கொண்டு கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளைக் கொண்டு கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

தென்காசியைச் சேர்ந்த குமார்(31), தனலட்சுமி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை ஜே.ஜே.நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்துள்ளனர்.

குமார் சரக்கு வாகன டிரைவராகவும், தனலட்சுமி பனியன் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், தனலட்சுமி தனக்குத் துரோகம் செய்து தென்காசியில் உள்ள மற்றொரு நபருடன் தொடர்பு வைத்துள்ளதாகச் சந்தேகமடைந்து அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று இரவு வாக்குவாதம் முற்றியதில் வீட்டில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு தனலட்சுமி கழுத்தை அறுத்து உள்ளார்.



இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற 15 வேலம்பாளையம் போலீசார் குமாரைக் கைது செய்து தனலட்சுமியின் உடலைப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...