பொள்ளாச்சியில் தலித் வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தலித் இளைஞரை தாக்கிய நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி அருகே தலித் வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள மக்கள் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஹரிஹரசுதாகர். இவர் அதே பகுதியில் தனியார் தோற்றத்தில் பணியாற்றி வந்தபோது அங்கு பணியாற்றும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக அவர் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பெண்ணை பார்ப்பதற்காக இரவு தோட்டத்திற்குச் சென்றபோது, அங்கு பணியாற்றி வந்த சில ஹரிஹரசுதாகரை, தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலித் இளைஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பல்வேறு அமைப்புகள் சார்பாக ஆனைமலை முக்கோணம் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தலித் இளைஞரை தாக்கிய நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...