பொள்ளாச்சியில் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஏழாம் வகுப்பு மாணவி - பொதுமக்கள் பாராட்டு!

மேலும், சேகரித்து வைக்கப்பட்டுள்ள நாணயங்களை முதலமைச்சரிடம் வழங்க உள்ளதாகவும், நாணயங்களை பாதுகாப்பாக அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஏழாம் வகுப்பு மாணவியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆன்ராய்டு மொபைல் போன்கள் எனப்படும் செல்போன்கள் என்றைக்கு வந்ததோ, அன்று முதல் செல்போன் என்பது தவிர்க்க முடியாத பொருளாக மாறிவிட்டது.

தற்போது பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் பாடபுத்தகங்களுக்கு பதிலாக செல்போனை எடுத்துக்கொண்டு அதில் விளையாடுவது, யூடியூப், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பது வாடிக்கையாக அமைந்துவிட்டது.

ஒரு சில மாணவ-மாணவிகள் மட்டுமே விளையாட்டு, கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.



பொள்ளாச்சி கந்தசாமி வீதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் முருகேசன் என்பவரது மகள் மிருதுளா ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிறுவயது முதல் பழங்கால நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.



தலைவர்களை சிறப்பித்தும், முக்கிய நிகழ்வுகளை சிறப்பித்தும் வெளியிடப்பட்ட நாணயங்கள், 50வது சுதந்திர வெள்ளிவிழா, உலகத் தமிழ் மாநாட்டை நினைவுகூறும் வகையில் வெளியிடப்பட்ட நாணயங்கள், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், நேதாஜி, நேரு, லால் பகதூர் சாஸ்திரி, அம்பேத்கர், அண்ணாதுரை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் நூற்றாண்டு விழா நாணயங்கள், உலக உழவர் தினம், பல்லுயிர் தினம் நினைவாக வெளியிட்ட நாணயங்கள், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் சிறப்பு குறித்து ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட நாணயங்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பழங்கால ரூபாய் நோட்டுகளை சேகரித்து வைத்துள்ளார்.

தனது தாத்தா, தந்தை போல தானும் சிறுவயதிலிருந்தே நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் தற்போது மாணவ மாணவிகள் செல்போனில் விளையாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருக்கின்றனர்.

மேலும், ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடி வாழ்வை சீரழித்து வருகிறார்கள்.

எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் நாணயம் சேகரிப்பு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் மாணவர்கள் ஈடுபடவேண்டும் என்று தெரிவித்த மாணவி சேகரித்து வைக்கப்பட்டுள்ள நாணயங்களை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்க உள்ளதாகவும், இந்த நாணயங்களை பாதுகாப்பாக அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்றும் மாணவி மிருதுளா கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...