பணி நாட்களை அதிகரித்து, ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பி.ஆர் நடராஜன் எம்பியிடம் ஊர்காவல் படையினர் கோரிக்கை..!

முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஊர்காவல் படை வீரர்களுக்கு இரண்டாம் நிலை காவலர்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.


கோவை: பணி நாட்களை அதிகரித்து, ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜனிடம் ஊர்காவல் படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊர்காவல் படை 1963ல் நாடு முழுவதும் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் நேரு அவர்களால் துவங்கப்பட்டது. அதில் தமிழக ஊர்காவல் படை ஒரு பெரிய அங்கமாக திகழ்கின்றது. ஆனால், தமிழக ஊர்காவல் படைக்கு ஆரம்ப காலத்தில் 15 ரூபாயில் துவங்கி 56-80-110 என ஊதியம் வழங்கி தற்பொழுது நாள் ஒன்றுக்கு 560 என்ற வீதம் மாதம் 5 நாட்கள் மட்டும் பணி வழங்கி மாதம் 2800 ரூபாய் ஊதியமாக வழங்குகின்றனர்.

ஆனால், மற்ற மாநிலங்களிலும் நமது பக்கத்து மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடக மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் 20,000 முதல் 30,000 வரையில் வழங்கி அந்த மாநில ஊர்காவல் படைவீரர்களின் வாழ்க்கை காக்கப்பட்டு வருகிறது.

ஊர்காவல் படையில் பணிபுரிவதால் மாதம் ஐந்து நாட்கள் விடுப்பு எடுக்க நேரிடும். திடீர் பாதுகாப்புப் பணிக்கு செல்ல நேரிடும் என்பதால் தனியார் நிறுவனத்திலும் எங்களை வேலைக்கு ஏற்க மறுக்கின்றனர். இதனால் பல குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றது. இதைவிட கொடுமையாக வறுமையில் கடந்த இரண்டு வருடங்களில் மூன்றிற்க்கும் மேற்பட்ட வீரர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலை நீங்க வேண்டும். எங்களது வறுமை போக்கப்பட வேண்டும் என்றால், எங்களது வேலை நாட்கள் உயர்த்தப்பட்டு, ஊதியம் உயர்த்தி வழங்கினால் மட்டுமே முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அது மட்டும் அல்லாமல் கொரோனா வைரஸ் பாதுகாப்புப் பணியின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தால் காவலர்களுக்கு மட்டும் நிதி வழங்கப்பட்டது. அதிலும் எங்கள் ஊர்காவல் படை வீரர்கள் பலர் உயிர்தியாகம் செய்திருக்கின்றனர். இந்த நிதி எங்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது என்று தெரியவில்லை. அதுமட்டும் அல்லாமல் நாங்கள் காவல்துறையுடன் சேர்ந்து தேர்தல் பாதுகாப்பு பணி, கோவில் திருவிழா கால பாதுகாப்பு பணி, பண்டிகை கால பாதுகாப்பு பணி, போக்குவரத்து பாதுகாப்பு பணி, பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு பணி மற்றும் இரவு ரோந்து பாதுகாப்பு பணி என அனைத்து பணிகளையும் பார்த்து வருகின்றோம்.

இதிலும் எங்கள் பணி ஐந்து நாட்கள் முடிந்த பின்பும் திடீர் அழைப்புகளுக்கு பணி செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் பார்த்த நாட்களும் உண்டு. அப்படி பார்த்தும் மாதத்தில் அதே 2800 தான். பணி செய்வது பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்கள். ஆனால் ஊதியமோ ஐந்து நாட்களுக்கு மட்டும் என்று 2800 ரூபாய் வழங்கப்படுகிறது.

முக்கியமாக, முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருந்த போது ஊர்க்காவல் படை வீரர்களுக்கு இரண்டாம் நிலை காவலர்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியை வலியுறுத்தினார் என்பதை நினைவு கூறுகின்றோம்.

எனவே, இந்த அவல நிலையை அரசுக்கு தெரிவித்து எங்களின் வாழ்வுக்கும் எங்கள் 16000 குடும்பத்தின் வறுமையை போக்கவும் வழிவகை செய்து, எங்களின் பணி நாட்கள் உயர்த்தப்பட்டு மற்ற மாநிலங்களை போல நமது மாநில ஊர்காவல் படை வீரர்களின் வாழ்வில் ஒளிவீச வழிவகை செய்யும் படி சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...