திருப்பூரில் உள்ள பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வெளிமாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர்: திருப்பூரில் உள்ள பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வெளிமாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா பரவலைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள சூழ்நிலையில், ரயில் மூலமாக வெளிமாநிலங்களிலிருந்து வட மாநில தொழிலாளர்கள் திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் பணி புரிவதற்காக வந்து கொண்டிருக்கின்றனர்.
திருப்பூரிலும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் நேற்று ஒரே நாளில் 667 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வடமாநிலத்திலிருந்து வரும் தொழிலாளர்களுக்குத் திருப்பூர் ரயில் நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவர்களின் ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் திருப்பூரில் அவர்கள் தங்கியுள்ள முகவரி ஆகியவை சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களுக்குப் பரிசோதனை முடிவுகள் வரும் வரை தங்கி இருக்கின்ற இடத்திலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.