திருப்பூரில் முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர்: திருப்பூரில் முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கொரோனா தொற்று பரவலைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில் முழு ஊரடங்கு தினமான இன்று திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து விசாரணைக்குப் பின்னரே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்களை அனுமதித்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி அருகே ஆட்டோவில் அளவுக்கதிகமான வட மாநிலத் தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆட்டோவிற்கு அபராதமும் விதித்தனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கொரோனா வேடமிட்டு மாநகராட்சி அருகில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.