கோவையிலிருந்து புட்டுவிக்கி சாலை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற போது அதிகாரிகள் அதிரடியாக களம் இறங்கி 1300-கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையிலிருந்து புட்டுவிக்கி சாலை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற போது அதிகாரிகள் அதிரடியாக களம் இறங்கி 1300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
கோவையிலிருந்து புட்டுவிக்கி சாலை வழியாகக் கேரளாவுக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் மாலை 4 மணி அளவில் கோவை மாவட்ட வழங்கல் அதிகாரி சிவகுமாரி, பேரூர் வட்ட வழங்கல் அலுவலர் மோகன்தாஜ் தலைமையிலான படையினர் புட்டுவிக்கி சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வேனை, சந்தேகத்தின் பேரில் நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை செய்தனர். ஆனால் வேனிலிருந்தவர்கள், அதிகாரிகளைப் பார்த்ததும் வேனை நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து வேனை சோதனை செய்த போது 1300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதன் பின்னர் வேனுடன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கோவை பூசாரி பாளையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.