திருப்பூர் மார்க்கெட் பகுதிகளில் மக்களுக்கு துணிப்பைகளை வழங்கி மாநகராட்சி ஆணையர் விழிப்புணர்வு..!

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் வாடிக்கையாளர்களுக்கு 500 க்கும் மேற்பட்ட துணிப்பைகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



திருப்பூர்: திருப்பூரில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் நோக்கத்திலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் துணிப்பைகளை வழங்கி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



தமிழகத்தில் பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டைமுற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், துணிப்பைகள் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம், மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அந்த வகையில், இன்று திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொது மக்களுக்கு துணிப்பைகளை வழங்கினார்.

மேலும், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.



சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு துணிப்பைகள் வழங்கிய மாநகராட்சி ஆணையர், மார்கெட் போன்ற இடங்களுக்கு வரும் போது துணிப்பைகளை கொண்டுவரும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...