குப்பைக்கு வைத்த தீயால் விபரீதம்: கோவையில் 2 வயது குழந்தை பலி

குப்பைக்கு வைத்த தீ பிடித்ததில் 2 வயது குழந்தை பரிதாபமாக பலியானது. தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: குப்பைக்கு வைத்த தீ பிடித்ததில் 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அம்மன் நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். ஐ.டி ஊழியர். இவரது மனைவி சுவாதி வயது 28, இவர்களுக்குக் கடந்த 2-மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இவர்கள் ஆதிரன் என்ற பெயர் சூட்டி இருந்தன.

நேற்று முன்தினம் வீட்டிலிருந்த சுவாதி தனது குழந்தையைக் கையில் வைத்தபடி வெளியே கூடியிருந்த குப்பைகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாகச் சுவாதியின் துப்பட்டாவில் தீப்பிடித்தது கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கையில் வைத்திருந்த குழந்தையுடன் மற்றும் சுவாதி ஆகியோர் மீது தீ பரவியது. சுவாதி வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார்.

இதனைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயிலிருந்து குழந்தைகளையும் தாயை மீட்டனர். பின்னர் இரண்டு பேரையும் கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தாயும், குழந்தையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 2-மாத ஆண் குழந்தையை ஆதிரன் இறந்தான். சுவாதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...