கோவையில் நடுரோட்டில் படுத்து தற்கொலைக்கு முயன்ற போதை ஆசாமி

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு ஒருவர் போதையில் நடுரோட்டில் படுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு ஒருவர் போதையில் நடுரோட்டில் படுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சூலூரை அடுத்த பட்டணம் புதூரை சேர்ந்த சிவராஜ் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.



அங்குச் சிகிச்சை அளிக்க மறுத்ததால் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்த அவர் பேருந்து முன் திடீரென சாலையில் படுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.



இதனையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நபரை மீட்டார். முதற்கட்ட விசாரணையில், சிவராஜின் உறவினர் ஒருவர் தாக்கியதால் சிகிச்சைக்குச் சென்றதாகவும், போதையில் சென்றதால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்ததால் போதை தலைக்கேறி ஆணையர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்ததும் தெரியவந்தது.

திடீரென சாலையில் படுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...