காரமடையில் இரும்பு திருடிய 3-பேர் கைது

காரமடை தொட்டிப்பாளையம் பகுதியில், தொழிற்சாலையில் புகுந்து 200-கிலோ இரும்பு திருடிய வாலிபர்கள் 3-பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: தொழிற்சாலையில் புகுந்து 200-கிலோ இரும்பு திருடிய வாலிபர்கள் 3-பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காரமடை தொட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரவேல்(48). இவர் சென்னிவீரம்பாளையத்தில் இரும்பு தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் வேலையை முடித்து விட்டு தொழிற்சாலையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். பின்னர் மறுநாள் காலை வழக்கம்போல தொழிற்சாலைக்கு வந்தார். அப்போது பின்பக்கம் மரவேலி உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 200-கிலோ இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, குமாரவேல் காரமடை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர்.

பின்னர் தொழிற்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 3-வாலிபர்கள் அங்கு புகுந்து திருடுவது பதிவாகி இருந்தது. அவர்களின் உருவ படங்களை வைத்து போலீசார் கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் போலீசார் 3 வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் காரமடை திம்மம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த்பாபு (40), ரஞ்ஜித் (19) மற்றும் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (36) ஆகியோர் என்பதும், அவர்கள் தொழிற்சாலையில் புகுந்து 200 கிலோ இரும்பு பொருட்களைத் திருடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...