கோவையிலிருந்து ஆலப்புழா செல்லும் (KSRTC) பேருந்தில் கஞ்சா கடத்தி செல்வதாக கேரள சுங்கதுறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாளையாறு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 11.3 கிலோ போதை பொருள் சிக்கியது.
கோவை: கோவையிலிருந்து ஆலப்புழா செல்லும் பேருந்தில் கொண்டு செல்லபட்ட அதீத போதை தரும் "ஹாசிஸ் ஆயில்" என்ற போதை பொருளை பறிமுதல் செய்து கேரள சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கோவையிலிருந்து ஆலப்புழா செல்லும் (KSRTC) பேருந்தில் கஞ்சா கடத்தி செல்வதாக கேரள சுங்கதுறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்க துறை அதிகாரிகள் வாளையாறு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, பேருந்தில் தடைசெய்யபட்ட போது பொருளை கொண்டு சென்ற நபரை கையும் களவுமாக கேரள சுங்கத்துறையினர் வளைத்து பிடித்தனர்.
அந்த நபரிடம் இருந்து 11.3 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.3.5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
விசாரணையில், போதை பொருளை கடத்திய நபர் கன்னியாகுமரியை சேர்ந்த விளவங்கோடு பகுதியை சேர்ந்த பிரமோத் (35) என்று தெரியவந்துள்ளது. பிடிபட்ட பிரமோதிடம் கேரள சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.