சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம்: பிரின்ஸ் கஜேந்திரபாபு

நீட் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


கோவை: நீட் தொடர்பாகத் தமிழக அரசு அனுப்பிய சட்ட முன் வடிவு தொடர்பாக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் 30-தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது அவர் கூறுகையில், திமுக அரசு பதவி ஏற்றவுடன் ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜன் தலைமையில், நீட் தொடர்பாக வல்லுநர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து, சட்ட முன்வடிவு வழங்கியது.

இந்த சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் ஏன் குடியரசுத் தலைவருக்கு இதுவரை அனுப்பவில்லை. 3-மாதமாக அனுப்பாமல் காலதாமதம் செய்து வருகிறார். தமிழகத்தில் நீட் தேர்வால் மன உளைச்சலில் மாணவர்கள் உள்ளனர்.

கூட்டாச்சி தத்துவத்தை ஆளுநர் மீறிச் செயல்படுகிறார். ஆளுநர் நீட் தொடர்பாகச் சட்ட வடிவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி மத்திய அரசு ஒப்புதலைப் பெற்றுத் தரவேண்டும்.

இல்லையெனில் ஜனவரி 30-ம் தேதி காந்தி நினைவு நாளில் சென்னையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். நீட் தொடர்பாக ஆளுநர், குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜன 30-முதல் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பாகத் தான் மட்டும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

அதற்கு முன்பு நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த உள்ளதாகவும், இதன் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கு நீட் பாதிப்பை எடுத்துச்சொல்வோம் எனக் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...