தலித் இளைஞரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி பொள்ளாச்சியில் காத்திருப்பு போராட்டம்

ஆனைமலையில் தலித் இளைஞரைத் தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 8-மணி நேரமாகக் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.


கோவை: ஆனைமலையில் தலித் இளைஞரைத் தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 8-மணி நேரமாகக் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மக்கள் சக்தி நகர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹர சுதாகரன், அதே பகுதியில் மேஜர் ராமசாமி என்பவரது தோட்டத்தில் பணியாற்றி வந்தார்.

அங்கிருந்து சில காரணங்களுக்காக அவர் பணியிலிருந்து நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இவர், அதே தோட்டத்தில் பணியாற்றி வந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹரிஹர சுதாகரன் அந்தப்பெண்ணைப் பார்ப்பதற்காகத் தோட்டத்திற்குள் சென்றதாகத் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, அந்த தோட்டத்தில் பணியாற்றும் சிலர் ஹரிஹர சுதாகரை கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில், காயமடைந்த ஹரிஹர சுதாகர் வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய நபர்களைக் கைது செய்ய கோரி, இன்று காலை, கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால், தொடர்ந்து 8-மணி நேரமாகச் சார் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில், செல்போன் விளக்குகளை ஒளிர வைத்து போராட்டக்காரர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும், சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்கப் போவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...