கோவை மருதமலை பகுதியில் யானை சாணத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டெடுப்பு..! வன உயிரின ஆர்வலர்கள் அதிர்ச்சி..!!

தொடர்ச்சியாக யானைகள் பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் போது, அவை உயிரிழக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.



கோவை: கோவை மருதமலை பகுதியில் யானை சாணத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்கள் ஏராளமான யானைகளின் வாழ்விடமாக உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடிச் செல்லும் யானைகள் அடிக்கடி வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், உணவுக்காக வனத்தை விட்டு வெளியே வரும் யானைகள், குப்பை மேடுகளில் கொட்டப்படும் காய்கறிக் கழிவுகளை உட்கொள்கின்றன. அப்போது பிளாஸ்டிக் கவர்களையும் சேர்த்து உட்கொள்வதால் யானைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதோடு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது.

இந்நிலையில், மருதமலை மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் கிடந்த யானை சாணத்தை வன உயிரின ஆர்வலரான முருகானந்தம் என்பவர் ஆய்வு செய்தபோது அதில், பிளாஸ்டிக் கவர்கள், முகக் கவசம், நாப்கின் இருந்தது தெரியவந்தது.



இதுகுறித்து முருகானந்தம் பேசும்போது, மருதமலைக்கு அருகிலுள்ள சோமயம்பாளையம் கிராமத்தில் எங்களது எதிர்ப்பை மீறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை தரப்பிலிருந்தும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த பகுதியில் இருந்து குப்பை கிடங்கை அகற்ற முடியவில்லை. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் 5 யானைகள் இந்த குப்பை மேடு உள்ள பகுதிக்கு அவ்வப்போது வருகின்றன. இங்கு யானைகள் வரும்போது அவற்றை கண்காணித்து, அங்கிருந்து விரட்டி வருகிறோம்.

தொடர்ச்சியாக யானைகள் பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் போது அவை உயிரிழக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனை துறை சார்ந்த அதிகாரிகள் கவனத்தில் கொண்டு யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று தெரிவித்தார்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...