திருப்பூரில் காதல் திருமணம் செய்த கல்லூரி பயிலும் ஜோடி தூக்கிட்டு தற்கொலை..!

தங்களால் குடும்பத்தில் பிரச்சினை வருவதாக எண்ணிய தம்பதியினர், தங்களை பிரித்து விடுவார்களோ என எண்ணி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் காதல் திருமணம் செய்த கல்லூரி பயிலும் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கரமகுடி பகுதியைச் சேர்ந்த திருப்பதி - சந்தியா தம்பதியருக்கு 3 பெண்கள், சரண் என்ற மகனும் உள்ளனர். இவர் குடும்பத்துடன் திருப்பூர் வீரபாண்டி, பழகாரர் தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சரண் (18) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் டி ஃபார்ம் (மெடிக்கல்) முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது தூரத்து உறவான புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த வினிதா (18) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவரும் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் கடந்த மாதம் வினிதாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் யாருக்கும் தெரியாமல் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

இதனிடையே, சரண் இன்ஸ்டாகிராமில் தனக்கு திருமணம் நடைபெற்று விட்டதாக பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட சரணின் சகோதரி இருவரையும் வீட்டுக்கு அழைத்துள்ளார். இருவரும் சரணின் வீட்டிற்கு சென்ற நிலையில் வினிதாவின் தந்தை வீரமுத்து தனது மகளை காணவில்லை என கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த வழக்கு தொடர்பாக சரணின் வீட்டாருக்கு விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சரணின் தந்தை படிக்கும் வயதில் எதற்கு திருமணம், படித்து முடியுங்கள் நானே திருமணம் செய்து வைக்கிறேன் என தெரிவித்து விட்டு புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, தன்னால் தனது குடும்பத்தினருக்கு பிரச்சினை வருவதாக எண்ணிய சரண், வினிதா இருவரும் தங்களை பிரித்து விடுவார்களோ என எண்ணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.



பணிக்கு சென்று திரும்பிய சரணின் தாயார் இருவரும் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவரின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார் உடல்களை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடல்களை கைப்பற்றிய போது வீட்டை சோதனை செய்ததில் சரண் எழுதி வைத்த கடிதம் சிக்கியது.



அதில் நாங்க லவ் பன்னது தான் தப்பு. எங்களால தான் இவ்வளவு பிரச்சினை, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. வினிதாவின் உடலையாவது அவங்க வீட்டுல கொடுத்துடுங்க என எழுதி வைத்து விட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...