கோவை மாவட்டத்தில் வீட்டுத்தனிமையில் உள்ள 1303 பேர் 32 மருத்துவக் குழுக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்..!

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு காய்ச்சல், ஆக்ஸிஜன் அளவை கண்டறிந்து, தொடர் சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் 1303 பேர் வீட்டுத்தனிமையில் உள்ளதாகவும் அவர்களை 32 குழுக்கள் கண்காணித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது. அதிதீவிரமாகப் பரவி வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் சேர்ந்து கொடிசியா மற்றும் பல பகுதிகளில் சிறப்பு சிகிச்சை மையத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் 1303 பேர் வீட்டு தனிமையில் இருந்து வருகின்றனர். இவர்களை 32 குழுக்கள் கண்காணித்து வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் 1303 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்க 32 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவக் குழுவில் மருத்துவர், செவிலியர், தன்னார்வலர்கள் என இணைந்து மாவட்ட நிர்வாகத்தோடு செயல்பட்டு வருகின்றனர். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு காய்ச்சல், ஆக்ஸிஜன் அளவை கண்டறிந்து, தொடர் சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை வகைப்படுத்தி அவர்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என கண்டறிந்து அதற்கேற்றவாறு குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...