கோவையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டிலேயே சென்று சிகிச்சை அளிக்க 5 மருத்துவக்குழுக்கள்‌ நியமனம்..!

இந்த மருத்துவக் குழுவில்‌ 1 மருத்துவர்‌, 1 செவிலியர்‌ என 5 மண்டலத்திற்கு 5 மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகராட்சி பகுதியில்‌ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில்‌ தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு (Home Triage) வீட்டிலேயே சென்று சிகிச்சை அளிக்க 5 மருத்துவக்குழுக்கள்‌ நியமிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில்‌ தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கு

வீட்டிலேயே சென்று சிகிச்சை வழங்கும்‌ பணியினை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்௧கரா இ.ஆ.ப., நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த மருத்துவக் குழுவில்‌ 1 மருத்துவர்‌, 1 செவிலியர்‌ கொண்ட ஒரு குழு வீதம்‌ 5 மண்டலத்திற்கு 5 மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறார்கள்‌. வீட்டில்‌ தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை (Home Triage) பிபி கிட்‌ அணிந்து மருத்துவர்‌ மற்றும்‌ செவிலியா்‌ கொண்ட குழு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி காய்ச்சல்‌ மற்றும்‌ ஆக்சிஜன்‌ அளவை கண்டறிந்து தொடர் சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள்‌.

மேலும்‌ மருந்து, மாத்திரைகள்‌ வழங்கப்படுகிறது. வீட்டிலேயே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ கலையரங்கத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும்‌ கட்டுப்பாட்டு மையம்‌ மூலமாகவும்‌ இப்பணிகள்‌ கண்காணிக்கப்பட்டுவருகிறது என மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி நல அலுவலர்‌ சதீஷ்குமார்‌, உதவி ST நல அலுவலர்‌ வசந்த்‌ திவாகர்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...