கோவையில் கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!

மேலும், பொதுமக்கள் கட்டாயம் இரண்டு முக கவசங்கள் அணிந்து, அரசு விதித்துள்ள வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்சிசன் வசதி, உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை இன்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் திடீர் ஆய்வு ஆய்வு செய்து அரசு மருத்துவமனையில் உள்ள குறைகளை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.



பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் எதிர்வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்கனவே கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த சிறப்பு சிகிச்சை மையங்கள், அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் 4300 படுக்கைகள் திரவ ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் உள்ளது. 99 கிலோ லிட்டர் 31 ஆக்சிஜன் பிளான்ட் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஓமைக்ரான் நோயால் ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தாலும், தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும், லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் கட்டாயம் இரண்டு முக கவசங்கள் அணிய வேண்டும். அரசு விதித்துள்ள வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...