பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - உடனடி நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்..!

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி டாப்ஸ்லிப் அருகே, மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி (டாப்சிலிப்) வனச்சரகத்தில் உள்ள ஒரு மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த, 11 வயது சிறுமி ஒருவரை சிலர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி அன்று டாப்சிலிப் அருகே உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த 11 வயது சிறுமியை சிலர் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து உள்ளதாகவும், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...