திருப்பூர் அருகே அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

பின்னர், காவல் ஆய்வாளர் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதே போல், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் விடுப்பில் உள்ளனர்.

இந்த நிலையில், காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...