கோவையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3-வாலிபர்கள் கைது

கடந்த சில நாட்களாகக் கோவை புரூக் பாண்ட் சாலையில் தொடர்ந்து பணம், நகை, செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 3-வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 3-வாலிபர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் பாலக்காடு நெம்மாரா பகுதியைச் சேர்ந்த வேலு என்ற சுரேஷ்குமார் (44). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு நின்று கொண்டிருந்தார். இரவு நேரமானதால் உக்கடம் செல்வதற்குப் பேருந்து இல்லாமல் நின்று கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு பைக்கில் வந்த மூன்று வாலிபர்கள் தாங்கள் உக்கடம் வழியாகச் செல்வதாகவும் வேண்டுமென்றால் எங்களுடன் வந்து இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

இதையடுத்து, சுரேஷ்குமார் அந்த வாலிபர்கள் வந்த பைக்கில் ஏறி சென்றார். அவர்கள் புரூக் பாண்ட் சாலை சிரியன் சர்ச் அருகே உள்ள ரயில்வே ட்ராக் அருகே இருட்டு பகுதியில் பைக்கை நிறுத்தி உள்ளனர்.

அங்கு சுரேஷ் குமாரை இறக்கி திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து சுரேஷ்குமார் ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சேர்ந்த சன்னாசி என்பவரின் மகன் முருகன் நல்லுசாமி (29), தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த சலீம் என்பவரின் மகன் சையது அப்ரில்( 19) மற்றும் தேனி பெரிய குளத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் திரு முருகன்(21) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களாகக் கோவை புரூக் பாண்ட் சாலையில் சிறுநீர் கழிக்க ஒதுங்கிய நபர்களிடம் பணம் நகை செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களுக்கும் ஏற்கனவே பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...