கோவையில் தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தினர் மனு

கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை தங்களுக்கு வழங்கப்படவில்லை என தமிழ்நாடு கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



கோவை: கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை தங்களுக்கு வழங்கப்படவில்லை என தமிழ்நாடு கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



தமிழ்நாடு கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தினர், வைரஸ் தொற்று காலத்தில் மாநகராட்சியில் பணியாற்றிய முன் பணியாளர்களான மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வழங்கப்பட்ட 15-ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, கிராமப்புறத்தில் பணியாற்றிய தூய்மை காவலர்கள் தூய்மை பணியாளர்கள் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்குக் கிடைக்கவில்லை எனவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முதல்வருக்குப் பரிந்துரைக்குமாறும் இச்சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து, இன்று தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நடத்தப்படுவதால் அரசின் மீது நம்பிக்கை வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை மறுபரிசீலனை செய்து கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொங்கலுக்கு முன்பு ஊக்கத்தொகையைத் தமிழக அரசு வழங்கி உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.



மேலும், தங்களது கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உதவுமாறும் கேட்டுக் கொண்டுள்ள அவர்கள் இதனால் கிராமப் புறத்தில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயன்பெறுவர் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...