கோவையில் வரும் ஜனவரி 10-ந் தேதி இணைய வழியில் பி.எஃப் ஓய்வூதியதாரர் குறைதீர்வு கூட்டம்..!

அன்றைய தினம் காலை 11 மணி முதல் 12 மணி வரை சந்தாதாரர்கள், பகல் 12 முதல் 1 மணி வரை தொழிலதிபர்கள், பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரை ஓய்வூதியதாரர்கள் பங்கேற்கலாம்.


கோவை: கோவையில் வரும் ஜனவரி 10-ந் தேதி இணைய வழியில் பி.எஃப் ஓய்வூதியதாரர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.

கோவை மண்டல வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவையில் டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நிதி ஆப் கே நிகட் (வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்) மற்றும் ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம் இணைய வழியில் வரும் பத்தாம் தேதி காலை 11 மணி முதல் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தலைமையில் நடைபெற உள்ளது.

அன்றைய தினம் காலை 11 மணி முதல் 12 மணி வரை சந்தாதாரர்கள், பகல் 12 முதல் 1 மணி வரை தொழிலதிபர்கள், பிற்பகல் 2. 30 முதல் 3.30 மணி வரை ஓய்வூதியதாரர்கள் பங்கேற்கலாம்.

தங்களது குறைகள் குறித்த விவரங்களுடன் பெயர் தொழில் மையம் நிறுவன முகவரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யுஏஎன் எண், ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள். மின்னஞ்சல் முகவரி, (கட்டாயம்) ஆகிய விவரங்களுடன்

ஜனவரி 6ம் தேதிக்குள் அலுவலகத்தில் pghs.rocbe@ep findia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...