உடுமலையில் 2 பெண்களை கொலை செய்து சடலத்தை வாய்க்காலில் வீசிய கொடூரம்..!

முதலில் மர்ம மரணம் என்று வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளியை தேடி வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலையில் 2 பெண்களை கொலை செய்து சடலத்தை வாய்க்காலில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நாட்டுக்கல் பாளையம் பகுதியில் அமராவதி புதிய ஆயக்கட்டு பாசன கால்வாயில் இருந்து பிரிந்து கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் காயங்களுடன் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து சடலமாக கிடந்தனர்.

இது குறித்து கணியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த 2 பெண்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் நெற்றியில் காயத்துடன் கையில் நாகராஜ் என்று டாட்டூ எழுதப்பட்டிருந்த நிலையில் சடலமாக கிடந்த பெண், உடுமலை இந்திரா நகரை சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி கோகிலாமணி (45) என்பது தெரியவந்தது. மற்றொரு பெண் உடுமலை எஸ்.வி.புரத்தை சேர்ந்த முத்தையா என்பவரின் மனைவி கீர்த்தனா (40) என்றும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் தோழிகள் என்றும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று கோகிலாமணி வீட்டிற்கு கீர்த்தனா ஒரு வாலிபருடன் வந்துள்ளார். பின்னர் கீர்த்தனா மற்றும் கோகிலாமணி ஆகியோரிடம் அந்த வாலிபர் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில், கீர்த்தனா மற்றும் கோகிலாமணி ஆகிய இருவரையும் அந்த வாலிபர் கொலை செய்து, பின்னர் இருவரது உடல்களையும் வாகனத்தில் கொண்டு வந்து, காரத்தொழுவு பகுதியில் உள்ள அமராவதி கிளை வாய்க்காலில் போட்டுச் சென்று இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, முதலில் மர்ம மரணம் என்று வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

2 பெண்கள் கொலை செய்து சடலங்களை வாய்க்காலில் வீசிச் சென்ற கொடூரம் அந்த பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...