பறவை காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் இருந்து கோவை வழியாக கோழிகள் கொண்டு வர தடை - தமிழக அரசு உத்தரவு..!

கேரளா தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து, கோழி குஞ்சுகள், முட்டைகள், தீவனம் போன்ற பொருட்களை பெறுவதாக இருந்தால், உரிய சான்றிதழ் பெற்ற பின் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: பறவை காய்ச்சல் பரவலை தடுக்க, கேரளாவில் இருந்து கோழி, வாத்து மற்றும் அவை சார்ந்த பொருட்கள் அனைத்தையும், வாகனங்களில் எடுத்து வர தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில், வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் நோய் பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பறவை காய்ச்சல் தொற்று பரவாமல் தடுக்க, தமிழக கால்நடை பராமரிப்புத் துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன் விபரம் வருமாறு:-

கேரளா எல்லையில் உள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 26 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 1,061 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுவினர் கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள், அதன் முட்டைகள், கோழியினம் சார்ந்த பொருட்கள் தமிழக எல்லைக்குள் நுழையாத வகையில், தடை விதித்து திருப்பி அனுப்புகின்றனர்.

தமிழகத்தில் நுழையும் வாகனங்களும், கிருமி நாசினி தெளித்த பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. பறவை காய்ச்சல் தொடர்பான விபரங்களை பெற, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கால்நடை நோய் நிகழ்வியல் பிரிவில், முதன்மை நோய் நிகழ்வியல் அலுவலர், பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அவரை, 044 - 2433 9097, 94450 32504 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். கோழி இறைச்சி விற்பனை செய்யும் இடங்களில், நோய் தாக்கம் மற்றும் இறப்பு குறித்து கண்காணிக்கப்படுகிறது.

பறவைகள் சரணாலயம், விலங்கியல் பூங்காக்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு, இறப்பு ஏற்பட்டால், உடனே கால்நடை மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினர் வழியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரளா தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து, கோழி குஞ்சுகள், முட்டைகள், தீவனம் போன்ற பொருட்களை பெறுவதாக இருந்தால், உரிய அரசு அலுவலர்களிடம் சான்றிதழ் பெற்ற பின் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகளிலும், தீவிர உயிரி பாதுகாப்பு நடைமுறைகளை கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...