புகாரின் பேரில் மளிகை கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூர் பகுதியில் மளிகை கடையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை கிணத்துக்கடவு அருகே கல்லாங்காட்டுபுதூர் பகுதியில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சண்முகம் வயது (54) என்பவரது மளிகை கடையில் கிணத்துக்கடவு போலீசார் சோதனையிட்டதில், அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், கடையில் இருந்த அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சண்முகம் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.