கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் விசாரணை தீவிரம்

மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் கொடநாடு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள போலீசார் அடுத்த கட்டமாக இந்த வழக்கில் தொடர்புடைய 10-வது குற்றவாளி ஜிதின் ஜாய் மற்றும் உதயகுமார் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.


கோவை: கொடநாடு கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஜாமீனில் உள்ள 2 குற்றவாளிகள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் உள்ள எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக சயான் உள்பட 10-பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு தனிப்படையினரும் பிரிந்து சென்று பலரிடம் விசாரணை நடத்தினர். முக்கிய குற்றவாளியான சயான், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சம்சீர் அலி, மனோஜ் சாமி மற்றும் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரித்தனர்.

கொடநாடு எஸ்டேட்டில் வேலை பார்க்கக் கூடிய ஊழியர்கள், கொள்ளை சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் என இதுவரை 150-க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி பல்வேறு ஆதாரங்களைத் திரட்டினர்.

மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகரும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். விபத்தில் இறந்த கனகராஜின் செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்தல் மற்றும் சாட்சியங்களைக் கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரையும் தனிப்படையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் பல கட்டங்களாகத் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இதுவரை ஊட்டி எஸ்.பி. அலுவலகத்தில் நடந்து வந்த விசாரணை தற்போது நிர்வாக காரணங்களுக்காகக் கோவை போலீஸ் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்த முடிவு செய்த தனிப்படையினர் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

அதன்படி கடந்த 22-ந்தேதி அவர் கோவை போலீஸ் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் கொடநாடு எஸ்டேட் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை கேட்டு அவர் அளித்த பதில்களை பதிவு செய்தனர்.

தற்போது மீண்டும் கொடநாடு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள போலீசார் அடுத்த கட்டமாக இந்த வழக்கில் தொடர்புடைய 10-வது குற்றவாளி ஜிதின் ஜாய் மற்றும் உதயகுமார் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்காக அவர்கள் 2 பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ள தனிப்படையினர் 7 மற்றும் 8-ந்தேதிகளில் கோவை போலீஸ் பயிற்சி மையத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி 7-ந்தேதி ஜித்தின் ஜாயிடமும், மற்றொரு குற்றவாளியான உதயகுமாரிடம் 8-ந்தேதியும் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

அவர்களிடம் இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன? எப்படி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர் என்பன உள்பட பல்வேறு கேள்விகளை 2 பேரிடம் கேட்க உள்ளனர். இதனால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...