சிபிஎம் கோவை மாவட்ட மாநாடு: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

மார்க்சிஸ்ட் கட்சியின் 23-வது கோவை மாவட்ட மாநாடு, மருதமலை பொதிகை மண்டபத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.


கோவை: மார்க்சிஸ்ட் கட்சியின் 23-வது கோவை மாவட்ட மாநாடு, மருதமலை பொதிகை மண்டபத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.



இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்திரராசன், பி.சம்பத், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலை கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.

தேவையற்ற மேல்முறையீடுகளை அரசு செய்வதை கைவிட வேண்டும். அத்திக்கிடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள பேரூராட்சிகளை இணைக்க வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும், மேம்பாலப்பணிகளை விரைவு படுத்த வேண்டும்.

அதுவரை மாற்று பாதைகளை உருவாக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அத்தக்கூலிகளாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்திரப்படுத்த வேண்டும். மாதத்தின் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மாற்று திறனாளிகளுக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.



நகர்புறத்தில் சாலை வசதி உள்ளிட்டு நிறைவேற்றப்படும் அடிப்படை வசதிக்கான திட்டங்களை கிராமப்புறத்தையும் சமகாலத்தில் இனைப்பதற்கான பணிகளை செய்ய வேண்டும். ஈசா யோகா மையத்தின் விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாநகராத்தின் குடிநீர் விநியோகத்திற்கான திட்டங்களை கோவை மாநகராட்சியே செய்ய வேண்டும்.

பன்னாட்டு சூயஸ் நிறுவனத்திடம் வழங்கியுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனவரி 11 ஆம் தேதி கோவை மாநகராட்சி அலுவலகத்தை பெருந்திரளாக முற்றுகையிடுவது, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிற வரையில் தீவிரமான போராட்டத்தை முன்னெடுப்பது என மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...