சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா- சிக்காந்தர் கைது

சூர்யாவும், சிக்காவும் ஒருவரையொருவர் ஆபசமாக தாக்கி வீடியோ போடுவதும் சில நாட்கள் கழித்து மீண்டும் இணைவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், "ரவுடி பேபி" சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்காந்தர் ஆகியோர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மதுரை: டிக் டாக் பிரபலம் "ரவுடி பேபி" சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்காந்தர் ஆகியோர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூர்யாவும், சிக்காவும் ஒருவரையொருவர் ஆபசமாக தாக்கி வீடியோ போடுவதும் சில நாட்கள் கழித்து மீண்டும் இணைவதும் வாடிக்கையாக உள்ளது.



டிக் டாக் பிரபலம் "ரவுடி பேபி" சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்காந்தர் ஆகியோர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளத்தின் ஆதிக்கம் அதிகரித்திருக்கும் இந்த காலகட்டத்தில், சாதரணமானவர்கள் கூட ஒரே இரவில் பிரபலமாகி விடுகிறார்கள்.

அப்படி டிக் டாக்கில் வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர் தான் ரவுடி பேபி சூர்யா. டிக் டாக்கை தடை செய்த பிறகு இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் தனது கவனத்தை திசை திருப்பினார். சிக்கா என்பவருடன் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார் சூர்யா.

இருவருக்கும் தனித்தனியாக கல்யாணமாகி, குடும்பம் இருந்தாலும், அதையெல்லாம் மறந்தனர். ஆளுக்கொரு யூடியூப் சேனல் நடத்துகிறார்கள். பின்னர் இருவரும் 2 வருடம் கழித்து பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் பிரிந்து சென்ற சிக்கா மீது கோபத்தில் இருந்த சூர்யா, துபாய்காரர் ஒருவருடன் எனது வாழ்க்கையை தொடங்க போவதாக அறிவித்த சூர்யா, “இவனோட வெளியே போனாலே அவரு உங்க தாத்தாவா அப்பாவானு கேக்காறாங்க, இந்த மாதிரி இருக்கும் போதே இவனுக்கு இத்தனை திமிரு, துபாய்காரன் 4 மாசத்துல வந்துடுவான். இனி என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

சூர்யாவும், சிக்காவும் ஒருவரையொருவர் ஆபசமாக தாக்கி வீடியோ போடுவதும் சில நாட்கள் கழித்து மீண்டும் இணைவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் இவர்கள் ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருவதாக ஜெனிபர் என்பவர் சென்னை சைபர் கிரைம் போலீஸிலும் கமிஷனர் அலுவலகத்திலும் தமிழக டிஜிபி அலுவலகத்திலும் புகார் கொடுத்திருந்தார்.

இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீஸார் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்காவையும் மதுரையில் வைத்து கைது செய்துள்ளனர். ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் மட்டுமல்லாமல் ஜி.பி. முத்து, திருச்சி சாதனா, இலக்கியா, திவ்யா கள்ளச்சி உள்ளிட்டோர் ஆபாசமாக நடிப்பதும், பேசுவதுமாக வீடியோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...