திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் பல்லடம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமியைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் பல்லடம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமியைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டம் சார்பில், ஊழியர் விரோத போக்கைக் கண்டித்தும், தகாத வார்த்தைகளால் பேசும் பல்லடம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமியைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுத்து பணியிட மாறுதல் செய்யும் வரை 3 நாள் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



எனவே, பல்லடம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து, பணியிட மாறுதல் செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர். மேலும் பல்லடம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமியைக் கண்டித்துக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...