குன்னூரில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்லியார் சாலையில் மரப்பாலம் அருகே பெங்களூரிலிருந்து குன்னூர் வந்துகொண்டிருந்த டஸ்டர் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்லியார் சாலையில் மரப்பாலம் அருகே பெங்களூரிலிருந்து குன்னூர் வந்துகொண்டிருந்த டஸ்டர் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக காரில் பயணித்தவர்கள் உடனடியாக தப்பி ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

பெங்களூருவிலிருந்து குன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்த டஸ்டர் வாகனத்தை குன்னூர் டிடிகே சாலைப் பகுதியில், வசித்து வரும் தர்மராஜ் என்பவர் ஓட்டி வந்தார். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில், மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது வாகனத்திலிருந்து திடீரென புகை வந்துள்ளது.

உடனடியாக வாகனத்தைச் சாலை ஓரம் நிறுத்திவிட்டு தனது மனைவி குழந்தைகளுடன் உடனடியாக கீழே இறங்கி ஓடினார்.



சிறிது நேரத்தில் வாகனம் திபுதிபுவென எரியத் துவங்கியது.



சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் போக்குவரத்தை நிறுத்தி தீயிணை அணைத்தனர்.



அதற்குள் தீ முழுவதுமாக எரிந்து கார் முற்றிலும் சேதமடைந்தது.



இதன் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...