நீலகிரியில் கடும் பனிமூட்டத்தால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்

கோத்தகிரி, குன்னூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக, பகல் நேரங்களில் வாகனங்கள் சாலையில் முகப்பு விளக்கு எரிந்தபடி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக, பகல் நேரங்களில் வாகனங்கள் சாலையில் முகப்பு விளக்கு எரிந்தபடி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மழை பெய்த நிலையில், நேற்று மிதமான குளிர் நிலவி காலநிலை 6 டிகிரியாக இருந்து. காலை முதல் நன்கு வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், தற்போது பனிமூட்டம் சூழ்ந்து கடும் குளிர் நிலவி வருகிறது.



மேலும் பனிமூட்டமானது தேயிலைத் தோட்டங்கள், சாலைகளில் சூழ்ந்துள்ளதால் பகல் நேரம் தற்போது இரவு நேரம் போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு, இருபுற திசை விளக்குகள் எரிய விட்டவாறு செல்லும் ‌சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் கடும் குளிர் காரணமாகச் சாலையில் ஆட்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது. எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.



Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...