கோவையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி பகுதிகளில் உள்ளவர்களுக்குச் சளி, காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரமடைந்துள்ளது. சுமார் 2500 களப்பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கோவை: கோவையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி பகுதிகளில் உள்ளவர்களுக்குச் சளி, காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரமடைந்துள்ளது.
கோவை மாநகர் பகுதியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இது தவிர கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் உள்ளதா? போன்ற கொரோனா தொற்றைக் கண்டறியும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கொரோனா அறிகுறி உள்ளதா? என ஆய்வும் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 2500 களப்பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றினை எளிதில் கண்டறிய முடியும்,’’ என்றார்.