வால்ரஸ் நிறுவனத்தை நேரில் பார்வையிட்ட பாஜகவின் நயினார் நாகேந்திரன்

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வால்ரஸ் நிறுவனத்தை பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் பார்வையிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வால்ரஸ் நிறுவனத்தை பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் பார்வையிட்டார்.

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வால்ரஸ் நிறுவனத்தை நேரில் பார்வையிட்ட பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், தென் மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் பலரும் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தின் மூலம் தற்போது வருமானம் ஈட்டி வருவதாகவும், தொழில் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் இங்குள்ள தொழில்களைத் தென் மாவட்டங்களில் கொண்டு செல்ல ஏதுவாக திருப்பூரில் வால்ரஸ் நிறுவனத்தைப் பார்வையிட்டுள்ளதாகவும் பேட்டி அளித்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் வழங்காதது குறித்து ஆட்சிக்கு வரும்போது ஒன்று சொல்கிறார்கள் வந்த பின்பு ஒன்று செய்கிறார்கள் நிர்வாக காரணங்களாகக் கூட இருக்கலாம் என தெரிவித்தார்.

அம்மா கிளினிக் மூடப்படுவது குறித்த கேள்விக்கு ஆட்சி மாற்றம் ஏற்படும்போது முன் இருந்த நல்ல திட்டங்களை முன்பைவிட நல்ல முறையில் பராமரிக்க வேண்டுமே தவிர அவற்றை முழுமையாக மூடி விடக்கூடாது எனவும், ஆட்சி பொறுப்பேற்ற ஆறுமாத காலமே ஆகியிருப்பதாகவும் முழுமையாகக் குறை கூறி விட முடியாது குறைந்தபட்சம் 10-மாதங்கள் தேவைப்படும் எனவும், நாளை கவர்னர் உரைக்குப் பின் நாடாளுமன்றத்தில் பாஜக கட்சியின் செயல்பாடு இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...