கோவையில் தனியார் இடத்தில் புகுந்து தாக்குதல்: 4-பேருக்கு போலீஸ் வலை

மசகாலிபாளையம் ஆண்டாள் நகரில் உள்ள தனியார் இடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில், நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: மசகாலிபாளையம் ஆண்டாள் நகரில் உள்ள தனியார் இடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில், நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த மாரண்ணன் என்பவரின் மகன் ஹரி பிரசாத் (25). இவருக்கு சிங்காநல்லூர் அடுத்த மசகாலிபாளையம் ஆண்டாள் நகரில் இவருக்குச் சொந்தமான இடம் உள்ளது.

இந்த இடத்தை சிவமணி என்பவருக்கு விற்பதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து, அந்த இடத்தை சுத்தப்படுத்திப் பாதுகாப்பு வேலி போட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும், சிவஞானம் என்பவரை வாட்ச்மேனாக அங்கு வேலைக்கு அமர்த்தி இருந்தனர்.

இந்நிலையில், அங்கு வந்த 10-க்கும் மேற்பட்டோர் திடீரென வேலிகளைச் சேதப்படுத்தி வாட்ச்மேனை அடித்து உதைத்தனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராகளையும் அடித்து நொறுக்கினர். மேலும் வாட்ச்மேன் சிவஞானத்திடம் உரிமையாளரைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டுச் சென்றனர்.

இதுகுறித்து, அங்கு இருந்த வாட்ச்மேன் சிவஞானம் இடத்தின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், வெங்கடேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜேம்ஸ், சம்சுதீன், வினோத், செரீப் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...