ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

கோவையில் ஜல்லிக்கட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான பின்னர் தான் முடிவு செய்ய முடியும் என அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.



கோவை: கோவையில் ஜல்லிக்கட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான பின்னர் தான் முடிவு செய்ய முடியும் என அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

தமிழக அரசின் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், கோவையில் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.



முதலில் சோமனூர் துவக்கியதைத் தொடர்ந்து சூலூர் மற்றும் ராமநாதபுரத்தில் இத்திட்டத்தைத் துவக்கி வைத்தார்.



இராமநாதபுரத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற 10-ம் தேதிக்குள் 10.78-லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும். இதன் மதிப்பு 58.02-கோடி, உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில் விவசாயிகள் பொதுவான கோரிக்கைகள் மட்டுமே வழங்கியுள்ளனர்‌.



யார் யாருக்கு இழப்பீட்டுத் தொகை வரவில்லையோ அவர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இழப்பீடு தொகை பெற்றவர்கள் அதிகப்படியாக தற்போது வழங்கக் கோரியுள்ளனர்‌.

கூடுதல் இழப்பீடு வேண்டுமென்றால் நீதிமன்றத்தை நாடுவது தான் வாடிக்கை சில அமைப்புகள் கூடுதல் இழப்பீடு பெற்றுத்தருவதாகத் தவறாக வழிகாட்டுகின்றனர். யாருக்கு இழப்பீடு விடுபட்டுள்ளது என்பது தொடர்பான பட்டியலை இதுவரை விவசாயிகள் வழங்கவில்லை, கிரைண்டர் உற்பத்தி செய்யும் அமைப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஆரம்பக் கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் எத்தனை பேர் கரூர் மாவட்டத்திலிருந்து பார் டெண்டர் விண்ணப்பித்துள்ளார்கள் என கேட்டுவிட்டு பின்னர் என்னிடம் கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கிறேன். கடந்தாண்டு மொத்தமுள்ள 5-ஆயிரம் கடைகளுக்கு 6400- படிவங்கள் வழங்கப்பட்டது.

இவ்வாண்டு 11- ஆயிரம் படிவங்கள் வழங்கப்பட்டு முறையாக டெண்டர் நடைபெற்றது. குறைவாகத் தொகை பரிந்துரைத்தவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கும், கடந்த ஆட்சியில் 1500- கடைகளுக்கு டெண்டர் விடாமல் முறைகேடாகச் செயல்பட்டு வந்துள்ளது.

விண்ணப்பப் படிவம் கிடைக்கவில்லை என யாராவது புகார் சொன்னார்களா? படிவத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என யாராவது சொன்னார்களா எனக் கேட்ட அவர், டெண்டர் திறக்கும் போது யாரும் எதுவும் பேசவில்லை. 10- ஆண்டுகள் என்பதற்காக, அரசின் நிபந்தனையைத் தளர்த்த முடியாது.

312- கோடி வருமானம் கிடைத்த இடத்தில் கடந்த ஆண்டு 89- கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது, 1551- கடைகளுக்கு டெண்டர் இன்றி பார் நடைபெற்றுள்ளது. அதிக விலைக்கு விற்பனை செய்த 134- பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எல்லோருக்கும் டோக்கன் வழங்கினால் ஜல்லிக்கட்டை 2, 3 நாட்கள் நடத்த வேண்டி இருக்கும். ஜல்லிக்கட்டு நடக்குமா என்பதை அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான பின்னர் தான் முடிவு செய்ய முடியும் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...