கிணத்துக்கடவில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

கிணத்துக்கடவு தாலுகா பகுதியிலுள்ள 70-ரேஷன் கடைகளில் 33-ஆயிரத்து 587-அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.


கோவை: கிணத்துக்கடவு தாலுகா பகுதியிலுள்ள 70-ரேஷன் கடைகளில் 33-ஆயிரத்து 587-அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள மக்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் 21-பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியைச் சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அதன்படி கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியிலுள்ள 70-ரேஷன் கடைகளில் 33- ஆயிரத்து 587-அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

வடபுதூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகமதுயாசின், கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.



இதில் வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக்குமார், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி, கிளைச் செயலாளர் பத்தராயன், திமுக மாணவர் அணி நிர்வாகி பிரபு, இளைஞரணி நிர்வாகி விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், சொலவம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கலம்பாளையம் நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.



இதேபோல், நெ.10-முத்தூரில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...