திருப்பூரில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு - விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.



திருப்பூர்-ஊத்துக்குளி சாலை வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (27) ஊத்துக்குளி சாலை வழியாக வேலை நிமித்தமாக திருப்பூர் வந்துள்ளார்.



அப்போது, மன்னரை பகுதியை கடக்கும்போது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டது, எதிரே ஒரு இருசக்கர வாகனம் வந்துள்ளது. அப்போது, இருசக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்டுள்ளார். அந்த இடத்தில் சாலை பணிகள் நடைபெற்று வந்தன.



இந்நிலையில், அந்த சாலை முழுமையாக சேதம் அடைந்ததால் கார்த்திக்ராஜா வாகனத்தை நிறுத்த முடியாமல் வாகனம் சரிந்தது. அப்போது கார்த்திக்ராஜா இடதுபுறமாக விழுந்ததில் இடது புறமாகச் சென்று கொண்டிருந்த ஈச்சர் வேன் அவர் மேல் ஏறி இறங்கியது.

இந்த விபத்தில் கார்த்திக் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திக் ராஜாவின் உடலை காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...